கொள்ளைக்காரனின் கொடூர செயல் – இமைபொழுதில் உயிர் தப்பிய பெண்!

Photo of author

By Parthipan K

அமெரிக்காவில் பல இடங்களில் பனிப்பொழிவு பெய்து வருகிறது, இயல்பு நிலை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அடுத்து இப்பொழுது, புதிதாய் சாதாரணமாக சாலையில் மக்களால் பாதுகாப்பாக செல்ல இயலவில்லை.

ஏனென்றால்,அங்கு வழிப்பறி திருடர்கள் கொடுமை ஆரம்பித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எப்போதும் ஒருவித பதட்டத்துடனும், பயத்துடனும் அவர்கள் வெளியே வர நேரிட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ஒக்லண்ட் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஈவு இரக்கமின்றி ஒரு வழிப்பறிக் கொள்ளை நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் சாலையின் ஓரமாக சென்றுகொண்டிருந்தபோது, அவரின் பையை திருடிய ஒருவன் காரில் தப்பிச்சென்றுள்ளான்.

அப்பொழுது அந்தப் பெண் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பையை மீட்பதற்காகவும் முயற்சி செய்தபோது அப்பையை தன்வசம் இழுக்க முயற்சி செய்துள்ளார், அப்போது, அவர் ஒரு பெண் என்றும் பாராமல் அந்த கொள்ளையன், அவரை தரதரவென்று சாலையில் வெகு தொலைவிற்கு இழுத்துச் சென்றுள்ளான்.

ஒரு கட்டத்தில் பையை மீட்க முடியவில்லை என்று அதிலிருந்து தப்பித்து ஓடி வந்துள்ளார் அப்பெண். இப்போது அந்த வீடியோ வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இவ்வளவு கொடூரமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும், பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்ற முயலாமல், அந்த நிகழ்ச்சியை தன் கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்தவர்கள் மனிதநேயம் மக்களுக்கு மறைந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர்.