பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளுக்கு.. ஆசிரியை செய்த கொடூர செயல்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

Photo of author

By Jeevitha

ஆந்திர மாநிலம்: பள்ளிக்கு 18 மாணவிகள் தாமதமாக வந்ததால், அவர்கள் தலைமுடியை வெட்டிய ஆசிரியை. அப்படி செய்தால் தான் அவர்களுக்கு ஒழுக்கம் வரும் என அவர் செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி என்கிற மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 18 பேர் காலை தாமதமாக வகுப்புக்கு வந்துள்ளார்கள். இதனை கண்டித்து சாய் பிரசன்னா என்ற ஆசிரியை இனிமேல் இந்த மாறி தாமதமாக வர கூடாது என கண்டித்து விடாமல், அவர்களின் தலை முடியை கத்திரிக்கோலால் வெட்டி உள்ளார்.

மாணவிகளின் தலை முடியை வெட்டிய பிறகு இந்த செயலை யாரிடமும் சொல்ல கூடாது என ஆசிரியை கூறியுள்ளார். ஆனால் மாணவர்கள் வீட்டுக்கு சென்றவுடன் பெற்றோர்கள் மாணவர்களின் தலையை பார்த்து என்ன நடந்தது என கேட்க உண்மையை சொல்லி விட்டார்கள்.

இதை அறிந்து பெற்றோர்கள் ஆசிரியர் சாய் பிரசன்னாவிடம் கேட்க மாணவர்கள் தாமதமாக இனிமேல் தாமதமாக  வர கூடாது, அவர்களின் ஒழுக்கம் மிக முக்கியம் என நினைத்து தான் இந்த செயலி செய்துள்ளேன் என அவர் பக்கம் நியாயத்தை பேசியுள்ளார். ஆனால் இது போன்று மாணவர்களை தண்டிக்க படக்கூடாது என பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஆசிரியை விசித்திரமான செயலால் பெற்றோர்கள் மத்தியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.