90களில் பிறந்த இளைஞர்கள் திருமண வயதை எட்டிய பின்னரும் இன்னமும் திருமணம் நடைபெறாத சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள்.
திருமணம் நடைபெறும் நடைபெறும் என்று காத்திருந்து அந்த இளைஞர்கள் மனதில் ஒருவித மன குழப்பம் ஏற்பட்டு மன அழுத்தம் அதிகமாகி விட்டது. இதன் காரணமாக அவர்கள் சில விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள். அப்படித்தான் கோவாவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
தெற்கு கோவாவில் உள்ள வெல்சான் கடற்கரையில் காதலை தொடர மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த 26 வயதான கிஷன் கலங்குட்கர் என்பவர் கைது செய்யப்பட்டடிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றன
கொலையொயாளியிடம் செய்த விசாரணையின்போது அந்த கொலையாளி தெரிவிக்கும்போது தானும் அங்கு இருக்கின்ற கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிவித்தார். அதோடு வெல்சான் கடற்கரைக்கு இருவரும் சென்ற சமயத்தில் அந்த பெண் காதலை தொடர விரும்பவில்லை எனவும், அதோடு இந்தக் காதலை முறித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் எனவும், இதன்காரணமாக ஆத்திரமடைந்து கத்தியால் பல முறை குத்தி கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார் அந்த கொலையாளி.
அதோடு உடலை கடற்கரையோரமிருக்கின்ற புதரில் வீசி சென்றதாக தெரிவித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் பிடித்தனர். அதோடு இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.