தற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர்

0
196
#image_title

தற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சோலாப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சைபர் கரம் காவல்துறையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சுவர்ணா ஷிண்டே அந்த இளைஞணை சமூக வலைத்தளம் வாயிலாகவே ஷேட்டிங் செய்துள்ளார்.

தேர்வில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது நான் கூட தேர்வில் தோல்வியடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

நான் மட்டும் எனது முயற்சியை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தால் இன்று ஒரு காவல்துறை அதிகாரி ஆகியிருக்க முடியாது என ஒரு நண்பனை போல சாட்டிங் செய்த காவல் துறை அதிகாரியின் அணுகுமுறையால் உற்சாகமடைந்த இளைஞன் உரையாடலின் முடிவில் தான் தற்கொலை செய்து கொள்ளும் பதிவை நீக்கி விடுவதாகவும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என உறுதி அளித்துள்ளார்.

தற்கொலைகள் தொடர்பான பதிவுகளை கண்டு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அளிக்கும் எச்சரிக்கையின் அடிப்படையில் களத்தில் இறங்கும் ஷிண்டே தலைமையிலான 06 பேர் கொண்ட சைபர் காவல் துறையினர் தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை கவுன்சிலிங் செய்து அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றுகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜேன்வரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மட்டும் இதுவரை 31 தற்கொலை முயற்சிகளை கவுன்சிலிங் மூலம் இவர்கள் முறியடித்துள்ளனர்.

ஆன்லைன் குற்றங்களை தடுக்கும் தங்களது வழக்கமான பணிகளுக்கு நடுவே இந்த செயலை சைபர் களின் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

Previous articleவெளுத்து வாங்கப்போகுது மழை! இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Next articleதொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!