எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட உணவில் இருந்த ஆபத்து! பெற்றோர் கவனித்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தினசரி 100 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டார். அந்த பதிவில் ஒரு குழந்தை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அதனால் அவருக்கு இரண்டு நாட்களுக்கு உணவு எதுவும் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது.
அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களாக குழந்தை எந்த உணவும் உண்ணாமல் இருந்துள்ளார்.அதனையடுத்து மருத்துவரின் அறிவுரையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பருப்பு குழம்பும் ,கஞ்சியும் கொடுத்துள்ளனர்.
அந்த பருப்பு குழம்பில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.அதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திம் புகார் அளித்தனர்.
Pathetic and frightening state of affairs at the most prestigious Medical facility in National Capital- Serving „Cockroach Daal“ to a 4 year old as first meal post major stomach surgery @aiims_newdelhi Shocked beyond belief 😒 pic.twitter.com/FU2fu7LuxH
— sahil zaidi (@sahilzaidi3) November 13, 2022
அதன் பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இந்த உணவு தரமற்றது குறித்து விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.மேலும் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.