மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்!

0
168
The daughter-in-law who said she was pregnant for her mother-in-law! That's the thing about his life!
The daughter-in-law who said she was pregnant for her mother-in-law! That's the thing about his life!

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்!

யார் யாரோ எப்படி எல்லாமோ பொய் கூறி வரும் நிலையில் பாவம் ஒரு பெண் மாமியாருக்கு பயந்து கர்ப்பம் என கூறி படாத அவஸ்தை பட்டுள்ளார். மாமியார்களும் ஒரு பெண் தானே குழந்தை பிறப்பது என்ன ஒரு பெண் கையில் மட்டுமா? உள்ளது. இதை எப்போதுதான் சமூகம் புரிந்து கொள்வார்களோ?

அந்த பெண்ணின் கணவனாவது அந்த பெண்ணை புரிந்து வைத்து இருந்தால் இப்படி ஒரு உயிர் அநியாயமாக போய் இருக்காது.

சென்னையை அடுத்த மாதவரத்தை சேர்ந்த மூலக்கடை பெரியார் நகரை சேர்ந்த ரஞ்சித் குமார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கனிமொழி ( 25 ) இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில் இவரது மாமியார் திருமணமான புதிதில் இருந்தே இன்னும் குழந்தை நிற்கவில்லை என்றும், மலடி என்றும் கூறி கனிமொழியிடம் தகராறு செய்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து கணவனும், மாமியாரும் மகிழ்ந்து உள்ளனர்.

கடந்த 6 மாதமாக கர்ப்பிணிபோல் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கணவர் அழைத்து சென்று விட்டு வந்துள்ளார். ஆனால் ஸ்கேன் பரிசோதனை முடிவு ( 16.06.21 ) வரும் என மருத்துவர் கூறிய நிலையில் எங்கே தனது பொய் தன் கணவனுக்கு தெரிந்து விடுமோ என பயந்த அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கி உள்ளார்.

இதுகுறித்து தவலரிந்த மாதவரம் போலீசார் கனிமொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி இரண்டு வருடங்களே ஆவதால் தண்டையார் பேட்டையை சேர்ந்த ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசாரும் இது தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் அறிவியலில் எவ்வளவு வளர்ச்சி பெற்று இருந்தாலும் சில பேர் இப்படி மற்றவர்களின் மனதை புண்படுத்தியே வாழ்கின்றனர். அந்த பெண் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்திருந்தால் அப்படி ஒரு பொய் சொல்லி இருப்பார். மேலும் அவர் அதன் காரணமாக அறிவே இல்லாமல் தூக்கில் தொங்கியும் உள்ளார்.

யாராக இருந்தாலும் நமக்கு கிடைக்க வேண்டியது நமக்கு எப்போது கிடைக்குமோ அப்போது கிடைக்கும் என நம்பிக்கையோடு இருங்கள்.

Previous articleஇம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை!
Next articleசென்னையில் உள்ள அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! ஊதியம்: ரூ.63,000!