நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! தமிழக அரசு திடீர் அறிவிப்பு! 

Photo of author

By Rupa

 

தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்பொழுது 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகள் மூலமாக தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த கடைகள் மூலமாக தமிழகத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 121 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் மாதம் 3698 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு மட்டும் மதுபானங்கள் கடைகள் மூலமாக தமிழக அரசுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை மறுதினம் அதாவது அக்டோபர் மாதம் 2ம் தேதி தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து அந்த நாள் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தி தினத்தன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளும், FL2 கிளப்புகளும், FL3 உரிமம் வைத்திருக்கும் ஹோட்டல்களையும் நாளை மறுதினம் அக்டோபர் மூடுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒவ்வொரு அரசு விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி டாஸ்மாக் கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு அக்டோபர் 2ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடாமல் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க தமிழக அரசு நடத்தி வரும் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் தலைமையில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. அந்த போராட்டமும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.