EVKS Ilangovan: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் போதே ஈ வெ ரா திருமகன் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் தான் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தந்தை , மகன் என இருவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இருக்கும் போது உயிரிழந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, தஞ்சை பெரிய கோவிலுக்குள் சென்று வரும் அரசியல் தலைவர்கள் உடனே உயிரிழந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது. சமீபத்தில் கூட ராஜராஜ சோழன் சதய விழாவிற்கு வருகை புரிந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கே.என் நேரு ஆகிய இருவரும் தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளே செல்லாமல் இருந்தார்கள்.
மேலும், கோவிலுக்கு வெளியே இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்கு மட்டும் மாலை அணிவித்து சென்றார்கள் என்பது அப்போது பேசு பொருளாக மாறி இருந்தது. அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வெற்றி பெறுவார்கள் உயிரிழப்பது சர்ச்சைக்குரிய பேசும் பொருளாக இணையத்தில் உலாவி வருகிறது.