அமெரிக்காவின் ஹவாய் காட்டுத் தீ விபத்து… 99ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…

Photo of author

By Sakthi

 

அமெரிக்காவின் ஹவாய் காட்டுத் தீ விபத்து… 99ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…

 

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கூ 99ஆக உயர்ந்துள்ளது.

 

கடந்த புதன் கிழமை அதாவது ஆகஸ்ட் 9ம் தேதி அமெரிக்காவின் ஹவாய் மாகணத்தில் உள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ விபத்தில் பழமை வாய்ந்த லஹேனா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகள் இந்த தீ விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

காட்டுத் தீ விபத்தில் லஹேனா நகரத்தில் 13000 கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் மேற்கு மாவி பகுதியில் 2200 கட்டடங்கள் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் 86 சதவீத கட்டிடங்கள் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகும்.

 

காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் மொத்த மதிப்பு 6 பில்லியன் டாலர்கள இந்திய மதிப்பில் சுமார் 50000 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது. வடக்கு சூழல், வேகமான காற்று ஆகிய காரணங்களால் காட்டுத் தீ மிக வேகமாக பரவியதாக கூறப்படுகின்றது.

 

இந்நிலையில் ஹவாய் மாகாணம் மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் தீ விபத்தில் காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.