பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதை வைத்து பொன்முடி அவர்கள் பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.இவ்வாறு இவர் பேசியதற்கு பல கட்சி சார்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்களும் ஆங்காங்கே நாங்கள் எல்லாம் ஓசி பஸ்ஸில் செல்ல மாட்டோம் என்று முழக்கமிட தொடங்கினர்.
இவரைத் தொடர்ந்து பல திமுக நிர்வாகிகள் பொது வெளியிலேயே மக்களை இழிவாக பேசி பல சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் பத்தாண்டுகள் முன்பு திமுக ஆட்சி நடைபெற்று இருந்த வேலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் மற்றும் உறவினர் மீது மணல் கடத்தல் வழக்கு போடப்பட்டது.
செம்மண் குவாரியில் உள்ள மணலை கடத்தியதால், தமிழக அரசுக்கு 28 கோடி நஷ்டத்தை இவர்கள் ஏற்படுத்தியதாக கூறினர். இதனால் காவல்துறையினர் மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை எதிர்த்து பொன்முடி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கூறியிருந்தார். ஆனால் நீதிமன்றமோ, பொன்முடி கொடுத்த மனுவை தள்ளுபடி செய்தது. உயர் கல்வித் துறை பொன்முடி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ இவரது வழக்கை ரத்து செய்யாமல், காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள சாட்சிகள் அனைத்தும் சரியானதாக உள்ளது அதனால் உங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது எனக் கூறி தீர்ப்பு வழங்கியது. இவர் மீது போடப்பட்ட வழக்கு உறுதியாக இருப்பதால் இவரது பதவிக்கு ஆபத்து வர நேரிடும். மேலும் உயர் நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு பொன்முடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.