எக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்த முடிவு!!! எலான் மஸ்க் விடுத்த அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி!!!
தற்பொழுது எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள டுவிட்டர் என்கிற எக்ஸ் தளத்தினை நிறுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தற்பொழுது இந்த அறிவிப்பு பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் பயன்படுத்தி வரும் செயலிகளில் ஒன்றாக டுவிட்டர் இருந்து வந்தது. இதையடுத்து இந்த டுவிட்டர் செயலியை எலான் மஸ்க் அவர்கள் வாங்கினார். அதன் பிறகு டுவிட்டர் என்ற பெயருக்கு பதிலாக எலான் மஸ்க் அவர்கள் எக்ஸ் என்று பெயர். மாற்றம் செய்தார்.
இதையடுத்து எக்ஸ் தளத்தில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களை எலான் மஸ்க் அவர்கள் செய்து வருகிறார். புளூடிக் வசதிக்கு மாதச் சந்தா, டுவீட் டெஸ்ட் வசதியை பயன்படுத்த தொகை, எளிய முறையில் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டும் போன்ற பல வசதிகளை செய்து வரும் எலான் மஸ்க் அவர்கள் ஐரோப்பாவில் எக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியமானது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக் கொண்டது. இந்த டிஜிட்டல் சேவைகள் சட்டம் தீங்கு ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை பரப்புவதை தடுப்பது, சிலருடயை பயனர் நடைமுறையை தடை செய்வது, சில தரவுகளை பகிர்வதை தடுப்பது பான்ற விதிமுறைகளை உள்ளடக்கிய உள்ளது.
இந்த புதிய இணையதள ஒழுங்குமுறை சட்டம் காரணமாக எலாம் பஸ்கள் அவர்கள் புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதாவது இந்த சட்டம் காரணமாக எக்ஸ் தளத்தின் சேவையை நிறுத்துவது தொடர்பாக எலான் மஸ்க் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார். மேலும் ஐரோப்பா நாட்டின் ஒன்றியத்தில் இருக்கும் எக்ஸ்தள பயனர்களை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.