மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை! இந்த தேதியில் கட்டாயம் வேலை நிறுத்தம் தான்!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை,மின்வாரியம் ஆகியவற்றுக்கு மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.அதற்காக ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர்.
அதனால் ஜனவரி மாதம் கடந்த மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.அதனை தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிவித்திருந்தனர்.
மேலும் இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில் கடந்த பேச்சு வார்த்தையில் எங்களுடைய கோரிக்கை தொடர்பாக மின் வாரியம் தரப்பில் இருந்து எந்த ஒரு உறுதியும் தரவில்லை.மேலும் ஊதிய உயர்வு தொடர்பாக ஒரு முன்மொழிவு கூட எடுத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் அரசு ஒப்புதல் வழங்க காத்திருக்கிறோம்.
எங்களுடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மின்வாரியம் தான்.அரசு இல்லை.ஏக்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் வழங்க வேண்டிய தேவை இல்லை.இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக திட்டமிட்டது போல ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.