பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகளை கொடுத்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, குடும்ப தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில் திமுக அரசனது ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடைபெற்று வருகின்றது.வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கிடைய நலனிலும் கல்வியிலும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.அதனால் மாணவர்கள் எந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டாலும் முழுமையாக பங்கேற்று வெற்றி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றது.