சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை… காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது…

0
117

 

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை… காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது…

 

சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசையில் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

தற்போதைய காலத்தில் சமூஇ வலைதளங்களின் பயன்பாடும் அதில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையும் அனைவருக்கும் உள்ளது. அதன்படி சமூக வலைதளங்காளான யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பலரும் தங்களுக்கு உள்ள திறமைகளை வைத்து வீடியோ அப்லோடு செய்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களும் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் கேரளம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசையில் காவல் நிலையத்திற்க்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்து அப்லோடு செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கருவாரக்குண்டு என்ற பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் அவ்வப்போது ரீல்ஸ் தயாரித்து பகிர்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசைப்பட்ட இளைஞர்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கிராபிக்ஸ் காட்சிகளுடன் ரீல்ஸ் தயாரிக்க தொடங்கினர்.

 

இதையடுத்து சமூகலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் அந்த ஐந்து இளைஞர்கள் காவல் நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்பது போல கிராபிக்ஸ் காட்சிகளுடன் ரீல்ஸ் தயாரித்துள்ளனர். பிறகு தயாரித்த இந்த ரீல்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் முகமது ரியாஸ், ஜாஸிம், பாரீஸ், பவாஸ், சலீம் ஆகிய ஐந்து பேரின் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

 

Previous articleசமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி… பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு… 
Next articleகேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்?