இயக்குனர் தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்களுக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நின்ற படப்பிடிப்புகள் 6000 அடி ரீலை எரித்த இயக்குனர் ஸ்ரீதர்.
1963ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த காதலிக்க நேரமில்லை என்ற படத்தையும் எம்ஜிஆர் சிந்திய ரத்தம் என்ற படத்தையும் ஸ்ரீதர் எடுப்பதாக இருந்தது.
இந்த இரண்டு படங்களில் போஸ்டர்களும் செய்து தாளில் வெளிவந்தது. காதலிக்க நேரமில்லை என்ற படம் கலர் படமாக வெளியானது. சிந்திய ரத்தம் படம் பிளாக் அண்ட் ஒயிட் படமாக வெளிவந்துள்ளது.
அப்பொழுது எம்ஜிஆரின் நண்பர்கள் அந்த படம் கலர் படம். உனது படம் பிளாக் அண்ட் ஒயிட் படம் என்று சொல்ல அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லையாம் எம்ஜிஆர்.
அதன் பிறகு பொதுவெளியில் இருவரும் சந்தித்தால் கூட இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது.
எம்ஜிஆரை வைத்த சிவந்த மண் என்ற படம் முதலில் எடுக்கப்பட்டது அந்தப் படம் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 6000 அடி ரியலை ஓபன் ஆகவே எரித்துவிட்டாராம் ஸ்ரீதர்.
1969 ல் சிவந்த மண் படம் இருவருக்கும் பிரச்சினை வரவே கிட்டத்தட்ட 6000அடி எடுக்க பட்ட ரீலை ஓபன் ஆக எரித்தார்.பிறகு சிவாஜியை வைத்து சிவந்த மண் 1969ல் வெளியிட்டார்.படம் நன்றாக ஓட வில்லை. மிகவும் நெருக்கடியில் இருந்த ஸ்ரீதர் எம் ஜி ஆர் ஏ வைத்து படம் பண்ணினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று எண்ணி உள்ளார்.
அதன்பிறகு எம்ஜிஆர் இடம் சென்று கேளுங்கள் என்று சொல்ல தயங்கி தயங்கி எம்ஜிஆர் உடன் பேச வேண்டும் என்று ஸ்ரீதர் தனது உதவியாளரை அனுப்பியுள்ளார். வீட்டில் வேண்டாம் என்று சொல்லி நம்பியாரின் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அதன் அதன் பிறகு உரிமை குரல் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.