இயக்குனர் என்னை அந்த இடத்தில் இப்படி செய்ய சொன்னார்- ரஜினி பட நடிகை ஓபன் டாக்!!

Photo of author

By Rupa

இயக்குனர் என்னை அந்த இடத்தில் இப்படி செய்ய சொன்னார்- ரஜினி பட நடிகை ஓபன் டாக்!!

Rupa

the-director-misbehaved-with-actress-shreya-gupto

சல்மான் கானுடன் ஏ ஆர் முருகதாஸின் “சிக்கந்தர்” படத்தில் நடித்தவர் தான் ஸ்ரேயா குப்தோ. இவர் ஆரம்பக்கட்ட காலத்தில் பல தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தர்பார், ரோமியோ ஜூலியட், வாரணம் ஆயிரம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவருக்கு சினிமா துறையில் நடந்த அனுபவம் குறித்து தற்சமயம் பகிர்ந்துள்ளார்.

நான் ஆடிஷனுக்காக சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஒரு இயக்குனர் என்னை அவர் அலுவலகத்திற்கு வர சொன்னார். நான் என் அம்மாவுடன் அந்த இடத்திற்கு சென்றேன். பின்பு ஆடிஷன் நடக்கும் ரூமிற்குள் நான் மட்டும் உள்ளே சென்றேன். அப்போது அங்கிருந்த இயக்குனர் என்னை உடனே வந்து என் மடியில் உட்காரு என கூறினார். பின்பு அங்கிருந்து நான் வெளியேறி விட்டேன்.

ஆடிஷன் கூட நடத்தாமல் முதலில் அவர் சொன்ன வார்த்தை எனக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியது, தற்போது வரை அந்த கசப்பான அனுபவத்தை என்னால் மறக்க முடியவில்லை என பகிர்ந்துள்ளார். இவரைப் போல பல நடிகைகள் தனது நேர்ந்த சினிமா அனுபவத்தை கூறியிருக்கின்றனர்.

சமீபத்தில் கூட தமிழ் சின்னத்திரை நடிகை நிர்வாண வீடியோ ஒன்று வைரலானது. இதற்கு பின்னணியில் ,  அவருக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி தான் அந்த வீடியோவை அவருக்கே தெரியாமல் எடுத்துள்ளனர். சினிமா துறை எட்டாத நிலைக்கு வந்தாலும் இது மாதிரியான இன்னல்கள் ஆரம்பக் கட்டத்திலிருந்து தற்போது வரை மாற வாய்ப்பில்லை என்பதே நிதர்சனமான உண்மை.