நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!..

0
240
The director who cheated her to become an actress!! The judge allowed Jayajyothi to be taken into custody and questioned!!..
The director who cheated her to become an actress!! The judge allowed Jayajyothi to be taken into custody and questioned!!..

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!..

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் தான் வேல்சத்ரியன்.இவருடைய வயது 38.சினிமா இயக்குனரான  இவர் 400ற்கும் மேற்பட்ட இளம்பெண்களை குறிவைத்து அவர்களை நடிகை ஆக்கி காட்டுவதாக கூறி ஆபாச படம் எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைதொடர்ந்து சினிமா இயக்குனர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயஜோதியை காவல் துறையினர் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

நானூறுக்கும் மேற்பட்ட இளசுகளை மட்டும் குறிவைத்து அவர்களிடம் உன்னை நான் நடிகை ஆக்கி காட்டுகேறேன் என சில இளம்பெண்களை மயக்கி தன் வலைக்குள் விழவைத்து ஆபாசமான முறையில் படம் எடுத்துள்ளார். விரைவில் நடிகை ஆகா வேண்டுமென்றால் ரூ.5000 முதல் ரூ.30.000 வரை முன் பணமாக பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி சினிமா இயக்குனர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயஜோதியை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட சூரமங்கலம் போலீசார் சேலம் கூடுதல் மகளிர் விரைவு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில் அவர்களின் மனுவை ஏற்ற நீதிபதி ஜெயஜோதியை மூன்று நாட்கள் மட்டும் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜெயஜோதியை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சினிமா இயக்குனர் வேல்சத்ரியன் என்பவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அனைவரும் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்.

பெண்கள் கொடுக்கும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறினார்கள்.அப்படி இல்லையென்றால் புகார் கொடுப்பவர்கள் நேரடியாகவோ அல்லது இன்ஸ்பெக்டர் 9894355193 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleபற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!
Next articleSBI HDFC ICIC ஆகிய வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா  நீங்கள்! இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!