ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

0
225

திருவள்ளூர் ஆட்சியர் வளாகத்தில் நடத்தப்படும் சுய உதவி குழு கடைகளில் பீப் பிரியாணி விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தென்றல் மகளிர் சுய உதவிக் குழு, அருந்தகம் மாற்றுத்திறனாளி, அம்பாள் மகளிர் சுய உதவிக் குழு, ஆவின் பாலகம் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகிறது

இந்த சுய உதவி குழு கடைகளில் டீ சுண்டல் போண்டா பஜ்ஜி கொழுக்கட்டை கோதுமை பணியாரம் தயிர் சாதம் சாம்பார் சாதம் தக்காளி சாதம் லெமன் சாதம் கீரை சாதம், புதினா சாதம் என சைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அசைவ பிரியர்கள் ஆட்சியர் வளாகத்திற்கு வெளியே உள்ள தனியார் ஹோட்டல்களில் உணவுகளை அருந்தி வந்தனர்

இந்த நிலையில் அசைவ உணவுகளையும் ஆட்சியர் வளாகத்தில் உள்ள சுய உதவி குழு கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சிக்கன் பிரியாணி சிக்கன் குழம்பு முட்டை சிக்கன் 65 மீன் குழம்பு மீன் வருவல் மட்டன் குழம்பு ஆட்டுக்கால் சூப் மட்டன் பிரியாணி என பல வகையான அசைவ உணவுகள் சுய உதவிக் குழுக்களின் உணவு பட்டியலில் இடம்பெற்றது,

இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழு நடத்தும் உணவகத்தில் மாட்டு இறைச்சி உணவு சேர்க்கக் கோரி தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதன் பெயரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் சுய உதவிக் குழுக்களின் கடைகளில் பீப் பிரியாணியை சேர்க்க உத்தரவிட்டிருந்தார்

இந்த ஆட்சியரின் உத்தரவை அடுத்து ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் மூன்று சுய உதவி குழு கடைகளிலும் உள்ள பட்டியலில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்படுவதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,

ஆனால் பட்டியலில் மட்டுமே இடம் பெற்றுள்ள பிப் பிரியாணி இதுவரை கடைகளில் விற்பனை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Previous articleதனியார் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு
Next articleஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி