திமுக சாம்ராஜ்யத்தை ஒட்டு மொத்தமாக நொறுக்க போகுது.. அதிமுக-வுடன் இணைந்த பழைய கை!!

0
510
The DMK empire is going to collapse completely.. Old hand joined with AIADMK!!
The DMK empire is going to collapse completely.. Old hand joined with AIADMK!!

ADMK DMDK: அதிமுக மீது தேமுதிக மிகவும் அதிருப்த்தியான நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் தனது மகனுக்கு எம்பி சீட் தராததுதான். மகனை முக்கிய பொறுப்பில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பிரேமலதா மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அதற்கு எடப்பாடி இடம் கொடுக்காததால் நாங்கள் கூட்டணியில் இல்லை என்று கூறினார். நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து ஜனவரியில் நடக்கும் மாநாட்டிற்கு பிறகு தான் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர்.

ஆனால் அதிமுக தேமுதிக-வை அதிமுக விடுவதாக தெரியவில்லை. எம் பி சீட் தர மறுத்தும் மறுநாளே அடுத்த வருடம் தருவதாக ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டனர். ஆனால் பிரேமலதா இதனை துளிகூட ஏற்கவில்லை. இதனிடையே, பாஜக திமுக என பலரும் கூட்டணி குறித்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பலமிழந்து நிற்கும் அதிமுகவில் தேமுதிக இல்லையென்றால் மாற்றுக் கட்சியினரை எல்லாம் சமாளிப்பது மிகவும் கடினம்.

வெற்றி வாகை சூடுவதிலும் சந்தேகம் வந்துவிடும். இதனால் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த்திடம் அதிமுக முக்கிய புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தி தான் வருகின்றனர். அந்த வகையில் மதுரை தனியார் மண்டபம் ஒன்றில், அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் பிரேமலதாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு கூட்டணி குறித்துதான் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மாநாட்டை முடித்த பிறகு அல்ல மாநாட்டிற்கு முன்பே அதிமுகவில் தான் தங்களது கூட்டணி என்பதை பிரேமலதா வெளிப்படையாக சொல்லாமல் இதன் மூலம் காண்பித்து விட்டார் என்றும் பேசுகின்றனர்.

Previous article2026 ஐ ஒரு கை பார்த்துவிடலாம்.. விஜய்யை கூட்டாளியாக்க ராமதாஸ் பேச்சு!! வெளியான அரசியல் சூழ்ச்சி!!
Next articleஎடப்பாடிக்கு ஷாக்!! விஜய்யுடன் கூட்டணி.. நடந்தே தீரும்!! செங்கோட்டையன் பளிச் பதில்!!