திமுக உட்கட்சி தேர்தலில் குழப்பம்! உரிமை சீட்டை உரியவரிடம் ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை – தலைமை அறிவிப்பு 

Photo of author

By Savitha

திமுக உட்கட்சி தேர்தலில் குழப்பம்! உரிமை சீட்டை உரியவரிடம் ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை – தலைமை அறிவிப்பு

திமுகவில் உறுப்பினர் உரிமைச் சீட்டை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காத நிர்வாகிகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை அறிவுறுத்தல்.

திமுகவில் நடந்து முடிந்த 15 வது உட்கட்சி பொதுத் தேர்தலுக்கான உறுப்பினர் உரிமை சீட்டு பதிவு செய்த அனைவருக்கும் ஏற்கனவே திமுக தலைமை அலுவலகத்தால் உரிமை சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமை அலுவலகத்திலிருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டினை பெற்ற நிர்வாகிகள் யாராக இருப்பினும் அவரவருக்கு உரிய உரிமைச் சீட்டினை ஒரு வார காலத்திற்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு ஒப்படைக்கவில்லை என யார் மீதும் தலைமை அலுவலகத்திற்கு புகார் வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது திமுக உட்கட்சி தேர்தலில் குழப்பமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.