போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்?

0
160
The DMK president who was elected for the second term uncontested! Are these the general secretary and treasurer?
The DMK president who was elected for the second term uncontested! Are these the general secretary and treasurer?

போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்?

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளா், பொருளாளா் , தி.மு.க. தலைவா் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கபட இருந்தது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என முன்னதாகவே தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தி.மு.க. தலைவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் .நேற்று  காலை பத்து  மணி முதல் ஐந்து  மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் திமுக தேர்தலில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இதனைதொடர்ந்து கட்சியின்  பொதுச் செயலாளராக துரைமுருகன்  மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது!
Next articleஅதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்!