குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

Photo of author

By Sakthi

குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

Sakthi

Updated on:

 

குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

 

பெற்ற குழந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் ஸினாய் மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை துறையில் பெண் மருத்துவர் கிரிஸ்டல் காஸெட்டோ அவர்கள் பணி புரிந்து வருகிறார். பெண் மருத்துவர் கிரிஸ்டல் காஸெட்டோ அவர்கள் மவுண்ட் ஸினாய் மருத்துவமனையில் மார்பகம், மகளிர் நோய், இரைப்பை, குடல் புற்று நோய், எலும்பு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த மருத்துவர் ஆவார்.

 

பெண் மருத்துவர் கிரிஸ்டல் காஸெட்டோ அவர்கள் இகான் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்தும் வந்தார். பெண் மருத்துவர் கிறிஸ்டல் காஸெட்டோ அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பெண் மருத்துவர் கிறிஸ்டல் காஸெட்டோ அவர்களின் வீடு நியூயார்க் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் சோமர்ஸ் பகுதியில் அமைந்து உள்ளது.

 

சம்பவம் நடந்த தினத்தன்று பெண் மருத்துவர் கிறிஸ்டல் காஸெட்டோ அவர்களுடன் வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு காலை 7 மணியளவில் குழந்தை இருக்கும் அறையில் இருந்து பலத்த சத்தம் ஒன்று கேட்டுள்ளது. எதோ ஒரு பெரிய பொருள் விழுந்ததாக நினைத்து சத்தம் கேட்ட அறைக்கு பார்ப்பதற்காக அந்த நபர் சென்றுள்ளார். அறைக்கு செல்லும் பொழுதே அதே போல் மீண்டும் ஒரு முறை சத்தம் கேட்டுள்ளது.

 

இரண்டாவது முறையாக அதே போல் சத்தம் கேட்டதை அடுத்து விரைவாக அவர் அந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது பெண் மருத்துவர் கிறிஸ்டல் காஸெட்டோ அவர்களும் அவரது குழந்தையும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்துள்ளனர். துப்பாக்கியால் குழந்தையை சுட்டு கொன்றுவிட்டு தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் கிறிஸ்டல் காஸெட்டோ அவர்களை பார்த்து அந்த நபர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண் மருத்துவர் உடலையும் குழந்தையின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.