அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை சந்திப்பதற்காக தீவிரமான கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்கள் ஆகவே அந்த இரு கட்சிகளுமே தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் வரும் 12ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதால் மீதம் இருக்கின்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் தெளிவாக முடிப்பதற்கான முயற்சியில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.திமுக சார்பில் முன்னரே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ,காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது.
இருந்தாலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சில சிறிய கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தங்களுக்கு தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருந்தாலும் அவர்களுடைய கோரிக்கையை திமுக தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. முடிந்தவரையில் போராடி பார்த்த கூட்டணி கட்சிகள் பின்பு இறங்கிவர அந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வந்திருக்கிறது.அந்த விதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டது. அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுக்கும் தல 6 தொகுதிகளை தான் திமுக ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறது.
இந்தநிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திமுக தரப்பில் அவரவருக்கு ஒவ்வொரு தொகுதிகளை வழங்குவதற்கு முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றுடன் திமுகவின் தொகுதி பங்கீடு பணிகள் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான வேலைகளில் திமுக இறங்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.