ஆசிட் வீசுவதாக 10-ம் வகுப்பு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனர்:! அதிரவைக்கும் காரணம்!!

Photo of author

By Pavithra

ஆசிட் வீசுவதாக 10-ம் வகுப்பு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனர்:! அதிரவைக்கும் காரணம்!!

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர்.24 வயதாகும் இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலைப்பட்சமாக நாகராஜ் காதலித்து வந்துள்ளார்.

இதுமட்டுமின்றி அந்த மாணவியிடம் பல மாதங்களாக தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார்.
ஆனால் அந்த மாணவி இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில்,தொடர்ந்து தன்னை காதலிக்க வேண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார்.ஒரு கட்டத்திற்கு மேலாக தன்னை காதலிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று அந்த மாணவியிடம் நாகராஜ் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இதனைக் கேட்டு பயந்து போன மாணவி நடந்ததை அனைத்தும் தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாகராஜ் மீது புகார் அளித்தனர்.புகாரின் பெயரில் விசாரித்த காவல்துறையினர் நாகராஜை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.