திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இன்டர்சிட்டி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை ஓட்டுனர் எந்தவித முன்னறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, தன் சொந்த தேவைக்காக தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். மேலும் அவர் கானா ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தினார் என்றும், தயிர் வாங்க கடைக்கு சென்று விட்டு, பின் மிகவும் அலட்சியமாக நடந்து வந்து மீண்டும் ரயிலை இயக்கினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் பலரும் இந்த நிகழ்வை அந்த ரயிலில் இருந்த பலரும் வீடியோவாக எடுத்து, அதை  சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவை பலரும் பார்த்தும், பகிர்ந்தும்  வருகின்றனர். மேலும் அந்த ஓட்டுனர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பாகிஸ்தானின் ரயில்வே துறை மந்திரி அசாம் கான் இதை தொடர்ந்து அந்த ஓட்டுனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் காரணமாக அந்த ஓட்டுனரின் வேலை பறிபோனது. மேலும் அந்த ரயிலின் உதவியாளரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து ரயில்வே அமைச்சர் தெரிவிக்கும்போது நாட்டின் உள்ள சொத்துக்களை தனிப்பட்ட ஒரு நபரின் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்றும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இனி எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். ரயில்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் இத்தனை அலட்சியமாக ஒருவர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஒன்றும் அரிதான விஷயம் மில்லை என்றும் கூறியது மேலும் பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment