இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Photo of author

By Parthipan K

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தற்போது இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், அதனோடு தற்போது புதிதாக நான்கு ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக யு.ஜி.சி அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

இந்த நான்கு ஆண்டு இளங்களை படிப்புக்கு கிரெடிட் என்னும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் தேவையான கிரெடிட் பெற்றிருந்தால், படிப்புக்கு இடையே ஒரு பாடத்தில் இருந்து இன்னொரு பாடத்திற்கு மாறிக் கொள்ளலாம். மேலும், தாங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்துகொள்ளும் வசதியும் மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்த படிப்பில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். மற்றும் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம் அது மாணவர்களின் விருப்பத்தை பொறுத்தது. மேலும் இந்த படிப்பின் மூலம் மாணவர்கள் பெற்ற கிரெடிட்டுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சான்றிதழோ, பட்டமோ அல்லது பட்டயமோ ஏதேனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பை நேரடி வகுப்பிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சேர்ந்து படிக்கலாம். இதில் முதல் மூன்று செமஸ்டர்களில் பொதுவான அறிமுக படிப்புகளாக இயற்கை அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இருக்கும். மாநில மொழிகள், ஆங்கிலம், யோகா உள்ளிட்ட பாடப்பிரிவுகள் பொதுவான படிப்புகளாக இருக்கும்.

மேலும், மூன்றாவது ஆண்டில் மாணவர்கள் தாங்கள் முக்கியமாக படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். கடைசி இரண்டு செமஸ்டர்களில், மாணவர்கள் அவர்களின் மேஜர் பாடம் அடிப்படியிலான ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.