தொப்பையை குறைக்க எளிமையான வழி! காலையில் இதை மட்டும் குடித்தால் போதும்! 

Photo of author

By Sakthi

தொப்பையை குறைக்க எளிமையான வழி!! காலையில் இதை மட்டும் குடித்தால் போதும்!!
ஊட்டச்சத்துக்கள் இல்லாத சுவை மட்டும் அதிகமாக இருக்கக் கூடிய உணவுகளை சாப்பிடுவதால் அதில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வயிற்றின் அடிப்பகுதியில் சேர்கின்றது. இதனால் தொப்பை உருவாகின்றது. இந்த தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான மருந்துகள் மற்றும் மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். இதனால் தொப்பை குறைந்து விடும். அதன் பின்னர் அந்த மாத்திரை மருந்துகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் மீண்டும் தொப்பை உருவாகும். எனவே தொப்பையை எளிமையாக நிரந்தரமாக குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை பூசணிக்காய்
* மஞ்சள் தூள்
* மிளகுத் தூள்
செய்முறை:
முதலில் வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய இந்த வெள்ளை பூசணிக்காய் துண்டுகளை ஒரு. மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இதை அரைத்துக் எடுத்து தனியாக ஒரு டம்ளரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் மஞ்சள் தூள் சிறிதளவும் மிளகு தூள் சிறிதளவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதோ தொப்பையை குறைக்கும் வெள்ளை பூசணி விதைகளை ஜூஸ் தயாராகி விட்டது.
தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும் இந்த ஜூஸை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வரும் பொழுது தொப்பை குறையும். மேலும் உடலில் உள்ள ஊளைச் சதை குறையும்.