பொடுகு குறைய எளிமையான வழி! கேரட் மற்றும் எலுமிச்சை மட்டும் போதும்!
தலையில் உள்ள பொடுகை முற்றாலுமாக நீக்க கேரட் மற்றும் எலுமிச்சையை வைத்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொடுகு பிரச்சனை பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனையாகும். இந்த பொடுகு பிரச்சனையை சரி செய்ய தனியாக ஷாம்புகள் இருக்கின்றது. இருப்பினும் இயற்கையான வழியில் பொடுகை நீக்கினால் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது.
ஆண்கள், பெண்கள் என்று கூறியவர். முதல் பெரியவர் வரை பொடுகு பிரச்சனை அனைவருக்கும் ஏற்படும். இந்த பொடுகு பிரச்சனையை முன்பே கவனித்து சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இது பல தொந்தரவுகளை தரக்கூடும்.
அதாவது பொடுகை கண்டுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும். முகத்தில் முகப்பருக்கள் ஏற்பட காரணமாகும். மேலும் தோல் வியாதிகள் ஏற்பட பொடுகு பிரச்சனை முக்கிய காரணமாகும். எனவே இந்த பொடுகு பிரச்சனையை எவ்வாறு சரி. செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* எலுமிச்சை
* கேரட்
* தேங்காய் எண்ணெய்
செய்முறை…
முதலில் எலுமிச்சையில் இருந்து எலுமிச்சை சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கேரட்டை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்றவைத்து காய் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் எண்ணெய் லேசாக சூடாகும் பொழுது அதில் நாம் தனியாக எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறு மற்றும் கேரட் சாறு இரண்டையும் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
நன்றாக காய்ச்சிய பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இந்த எண்ணெயை ஆற. வைக்க வேண்டும். பின்னர் இந்த எண்ணெய் ஆறிய பிறகு இதை காற்று புகாத பாட்டில் ஒன்றில் ஊற்றி வைத்துக் கொண்டு அவ்வப்போது பயன்படுத்த வேண்டும்.
அதாவது இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் போதும். பொடுகு சுத்தமாக மறைந்து விடும்.