உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி  மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது மக்கள் வெளியே செல்வதினால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது என சுகாதாரத்துறை தெரிவித்தனர். அதனால் அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றனர். மக்கள் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனர். தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா பிஎப் 7 வைரஸ் சீனா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா போன்ற உலக நாடுகளில் மீண்டும் படையெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் அங்குள்ள இந்திய மக்கள் மீண்டும் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கேரளா அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொது இடங்கள் பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம்  முககவசம்  அணிந்திருக்க வேண்டும். இதற்கு கடந்த ஜனவரி 12ஆம் தேதியே கேரளா அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. மேலும் கடைகள் திரையரங்குகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் தங்கள் கைகளை கழுவுவதற்கு கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். அது மட்டும் இன்றி வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து இடங்களிலும் ஏற்பாடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் தொற்று அதிகரித்து வருவதினால் இந்த உத்தரவு ஜனவரி 12 முதல் 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.