அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு!

Photo of author

By Hasini

அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு!

Hasini

The effect of seeing that kind of picture!

அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு!

பெண்பிள்ளைகளின் மீது செய்யப்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி தினமும் ஒரு செய்தியாவது நாம் பார்க்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் இடங்கள், பஸ் பயணங்கள், ரயில் பயணங்கள், என இதற்கு முற்றுப்புள்ளி இல்லாத அளவுக்கு பெரிதாகிக்கொண்டே போகிறது.

அப்படி இருக்கையில் சிறு பிள்ளைகள் வைத்திருக்கும் வீடுகளில் அதுவும் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் வீட்டில் மிக பத்திரமாக அவர்களை வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாம் கேட்கும் விஷயங்கள் அப்படி இருக்கின்றது. தற்போது சென்னையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் 11 வயது சிறுமி அருகிலுள்ள கணினி மையத்திற்கு சென்று மின் கட்டணத்தை செலுத்த சென்றார்.

வெகுநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர் மற்று உறவினர் இந்த குழந்தையை தேடி பின் விட்டுவிட்டனர். அதன் பின் மீண்டும் தேடும்போது வீட்டின் அருகில் இருந்த புதரில் முகம் மற்றும் முதுகு போன்றவற்றில் காயங்களுடன் பிணமாக அந்த 11 வயது குழந்தை மீட்கப்பட்டது.

முகத்தில் எல்லாம் காயங்கள் இருந்ததனால் பிரேத பரிசோதனைக்குஅந்த குழந்தையின் உடல் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு 17 வயது மதிக்கத்தக்க, ஐடிஐ மாணவன் ஒருவன் சிறுமியுடன் கடைசியாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை பிடித்து விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளான்.

முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசினாலும் பின் விசாரித்த விதத்தில் அவன் பல தகவல்களை கூறினான். அந்த சிறுமி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலும், அந்த சிறுவனின் கையில் இருந்த செல்போன் என்னும் ஒன்றுதான் என்பதை காவல் துறையினர் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அதன்பின் சிறுவனிடம் தீவிரமான விசாரணையில் ஈடுபட்ட போது சிறுமியை கொலை செய்தது நான் தான் என்று ஒப்புக் கொண்டான். மேலும் எதற்காக கொலை செய்தான் என்பதை கேட்டபோது, 18 பிளஸ் படங்களை அதாவது ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையாகி விட்டதால் அதில் வருவதைப் போலவே, சிறுமியை காட்டுப்பகுதியில் தூக்கிச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறியுள்ளான்.

அதற்கு அந்த சிறுமி தன் தாயிடம் கூறுவதாக சொன்னதால் ஆத்திரமடைந்து, சிறுமியின் தலையை ஒரு பெரிய கல்லால் தாக்கியுள்ளான். இதில் அந்த சிறுமி உயிருக்குப் போராடி அப்போதே இறந்துவிட்டாள். ஆனாலும் அந்த நேரத்திலும் அந்த ஐடிஐ மாணவன் பல இடங்களில் அந்த சிறுமியின் உடலில் கொடூரமாக கடித்து வைத்துள்ளான்.

மேலும் அவனுடைய செல்போனை சோதனை செய்து பார்த்த போது அதில் பல ஆபாச படங்களை வைத்திருந்ததும், அதிக தேடுதலில் ஆபாச பக்கங்களை தேடியதும் தெரியவந்தது. சிறுவன் மீது கொலை வழக்கு போடப்பட்டு இருந்தாலும், சிறுமியின் உறவினர்கள் அந்த ஐடிஐ மாணவன் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பிணக்கூறு ஆய்வு முடிந்த பின்பு அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்வோம் என போலீசார் அறிவித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.