பகுஜன் சமாஜ் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்! விஜய் கட்சிக் கொடி விவகாரத்தில் முடிவு! 

Photo of author

By Rupa

 

நடிகர் விஜய் அவர்களின் கட்சிக் கொடியில் யானை சின்னம் இருப்பதால் அதை தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேலும் விஜய் கட்சிக் கொடி விவாகரத்தில் தலையிட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழியேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சிவப்பு மஞ்சள் சிவப்பு என்ற நிறத்திலும், கொடியில் இரண்டு யானை சின்னமும், இரண்டு யானை சின்னங்களுக்கு நடுவில் வாகை மலரும் நட்சத்திரங்களும் இருந்தது. இந்நிலையில் கொடியை அறிமுகம் செய்து வைத்த சில மணி நேரங்களிலேயே மீம்ஸ்கள் பறந்தது. அதே போல எதிர்ப்பும் கிளம்பியது.

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் யானை சின்னத்தை கட்சிக் கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறி பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடிகர் விஜய் அவர்களின் கட்சிக் கொடி விவகாரத்தில் தலையிட முடியாது கூறி பகுஜன் சமாஜ் கட்சி அளித்த கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் “கட்சிக் கொடிகளுக்கும் அதில் இடம் பெறும் சின்னங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிப்பது கிடையாது. பிற கட்சிகளின் சின்னங்கள் மற்றும் பெயர்களை மற்ற கட்சிகளில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு ஆகும்.

அந்த வகையில் நடிகர் விஜய் அவர்களின் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதாகவும் அதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தற்பொழுது பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. அந்த கோரிக்கையை நிராகரிக்கின்றோம். மேலும் நடிகர் விஜய் அவர்களின் கட்சிக் கொடி விவகாரத்தில் தலையிட முடியாது” என்று கூறியுள்ளது.