தேர்தல் ஆணையத்தின் அதிரடி திருப்பம்! இபிஎஸ்- ற்கு சாதகமா!!
இபிஎஸ் பெயரில் வந்த அதிமுக –வின் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து ஓ.பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரு அணிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. ஜூலை-11 அன்று நடைபெற்ற அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்து எடுக்கப்பட்டார். அந்த கூட்டத்திலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது என்று ஓ.பன்னிர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டு அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் கட்சியின் உரிமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கிலும் இபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில் அதை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் எடப்பாடி தலைமையில் பொதுக்குழுவின் தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டது.அதனை எதிர்த்து தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கடந்த அக்டோபர்-3 ஆம் தேதி எடப்பாடியின் கடிதத்தில் அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளர் என குறிப்பிடப்பட்டு 2021-2022 ஆண்டுக்கான அதிமுக-வின் வரவு, செலவு கணக்குகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகார பூர்வ இணையதளத்தில் இபிஎஸ் தரப்பு ஆவணங்களை பதிவேற்றம் செய்துள்ளது.அதனுடன் எடப்பாடி பழனிசாமி பெயரில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரித்துறை கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் டிவிஸ்ட் மூலம் பழனிசாமியை தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரராக அங்கீகரித்து விட்டன என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதிமுகவின் ஒற்றை தலைமை யார் என 6 மாதங்களாக உட்கட்சி விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையதின் இந்த திடீர் முடிவு இபிஎஸ்-க்கு சாதகமாகவும் ஓபிஎஸ்-க்கு பாதகமாகவும் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் ஓபிஎஸ்-க்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.