அதிமுகவினர் தங்கி இருந்த மண்டபத்துக்கு சீல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி! 

Photo of author

By Amutha

அதிமுகவினர் தங்கி இருந்த மண்டபத்துக்கு சீல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி! 

அனுமதி இன்றி அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஈரோடு தனியார் மண்டபம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஈரோட்டில் அரியலூர் மாவட்ட அதிமுகவினர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட மண்டபத்தை பூட்டி தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் காரணமாக தேர்தல் விதிகள் தற்போது அமலில் உள்ளன. இதனால் திருமண மண்டபம், உள் அரங்கம், பணிமனை போன்றவற்றில் தங்கவும், கூட்டம் நடத்தவும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வினரில் பெரும்பாலானவர்கள் விடுதி, காட்டேஜ், தனியார் வாடகை வீடுகள், காலியாக உள்ள கட்டிடங்களை பேசி தங்கி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவதாக பறக்கும் படை அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அந்த திருமண மண்டபத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அ.தி.மு.க வினர்  கூட்டம் நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் பறக்கும் படை அதிகாரி மணிகண்டன் இங்கு கூட்டம் நடத்தக்கூடாது. அதனால் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் அதனை ஏற்காமல் அதிமுகவினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி உதவி தேர்தல் நடத்தும் ஆணையர்  முத்துகிருஷ்ணன், டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் போலீசார் வந்திருந்தனர்.  இங்கு கூட்டம் நடத்தக்கூடாது என கூறவும் அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

பின்னர் அதிகாரிகள் மண்டபத்தின் இரண்டு நுழைவாயில்களையும் பூட்டி மண்டபத்தை சீல் வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.