நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!!

0
119
#image_title

நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!!

ஆந்திர மாநிலத்தில் நகைக்கடை நடத்தி வரும் ஒருவருக்கு கோடி கணக்கில் மின் கட்டணம் வந்தது அந்த நகைக்கடை உரிமையாளரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தற்பொழுது முதல்வர் ஜெகன் மகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் அஷோக் குமார் என்பவர் சிறிய நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு இந்த மாதம் மட்டும் 1.15 கோடி ரூபாய் மின்கட்டணம் வந்தது. இதை கண்டு நகைக்கடை உரிமையாளர் அஷோக் குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வழக்கமாக மாதம் 8000 ரூபாய் வரை மின் கட்டணம் வரும். அதையும் ஆரோக்கியம் குமார் அவர்கள் தவறாமல் செலுத்தி விடுவாராம். இந்நிலையில் 1.15 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் நகைக் கடை உரிமையாளர் அஷோக் குமார் குழப்பத்தில் இருந்தார்.

இதையடுத்து மின் கட்டணம் கோடி கணக்கில் வந்தது குறித்து அப்பகுதி மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் நகைக் கடைக்கு வந்து மின்மீட்டரை பரிசோதனை செய்தனர். இதையடுத்து மின்மீட்டர் அதிகம் சூடாவதால் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து விரைவில் புதிய மின்மீட்டர் பொருத்தப்படும் என்றும் புதிய மின் கட்டணத்திற்கான ரசீதும் வழங்கப்படும் என்றும் கூறினர்.

Previous articleகல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.58100 ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!
Next articleவெரிடாஸ் வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற ஊழியர்கள்!!! காவல்துறையிடம் புகார் அளித்த சமையல்காரர்!!!