வெரிடாஸ் வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற ஊழியர்கள்!!! காவல்துறையிடம் புகார் அளித்த சமையல்காரர்!!! 

0
64
#image_title
வெரிடாஸ் வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற ஊழியர்கள்!!! காவல்துறையிடம் புகார் அளித்த சமையல்காரர்!!!
தேனி மாவட்டத்தில் வெரிடாஸ் வீட்டுக் கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதிக் சென்ற நிதிநிறுவன ஊழியர்கள் மீது சமையல்காரர் காவல் துறையினரிடம் தன்னுடைய ஆவணங்களை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் க.விலக்கு அருகே உள்ள இந்திரா நகர் காலனியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். சமையல்காரர் பிரபு வசிக்கும் வீட்டின் மீது வெரிடாஸ் என்ற கடன் வழங்கும் நிறுவனத்திடம் சில ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் ரூபாய் அடமானம் கடன் பெற்றுள்ளார்.
வாங்கிய கடனுக்கு முறையான தவணை தொகை செலுத்திய பிரபு அவர்கள் தன்னுடைய ஆவணங்களை திருப்பித் தருமாறு வெரிடாஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால் சமையல்காரர் பிரபு அவர்களுக்கு இன்னும் 1.50 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அதை திருப்பி செலுத்திவிட்டு ஆவணங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு வெரிடாஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பிரபு அவர்களின் பைக்குகளையும் வெரிடாஸ் நிறுவனம் பறிமுதல் செய்தது. இதையடுத்து பைக்குகள் பறிமுதல் செய்தது குறித்து காவல் துறையிடம் வெரிடாஸ் மீது புகார் அளித்து பின்னர் பைக்குகளை பிரபு அவர்கள் திரும்பப் பெற்றுள்ளார்.
இதையடுத்து பிரபு அவர்கள் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவருடைய வீட்டுக்கு வந்த வீரர்கள் ஊழியர்கள் வீட்டின் சுவரில் “வெரிடாஸ் வீட்டுக் கடன் கட்டவில்லை” என்று பெரிய எழுத்துக்களால் பெயின்ட்டை பயன்படுத்தி எழுதிவிட்டு சென்றனர்.
வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பிரபு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். வாங்கிய கடனுக்கு மேல் கட்டியும் தன்னையும் தன் குடும்பத்தையும் வெரிடாஸ் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாகவும் சுவரில் எழுதியதை பற்றியும் பிரபு அவர்கள் க.விலக்கு காவல் துறையிடம் புகார் அளித்தார். மேலும் தன்னுடைய வீட்டு ஆவணங்களை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.