இந்த மாதம் மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கா!! அப்போ இத பாருங்க!!

இந்த மாதம் மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கா!! அப்போ இத பாருங்க!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்ததால் மின் ஊழியர்கள் யாரும் மக்களின் வீடுகளுக்கு சென்று மின் கட்டணத்தை கணக்கீடு செய்ய முடியாமல் போய்விட்டது. இதனால் மக்களால் சரியான மின் கட்டணம் என்வென்று தெரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே, கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் செலுத்தப்பட்ட அதே மின் கட்டண தொகையையே இம்மாதம் பயனாளிகள் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. இந்த நிலையில், ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மொத்தம் நான்கு மாதங்களுக்கும் சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இந்த மாதிரியான அதிக கட்டணம் வருகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். நுகர்வோர் ஒருவர் இவ்வாறு அதிக கட்டணம் செலுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார் என்று தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்வீட்டர் பக்கத்தில்  பதிலளித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: அந்த பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால், தீர்வும் தெளிவும் ஏற்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ருந்தார்.  இதனால் பலரும் தங்கள் மின் இணைப்பு விவரத்தையும், செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த தகவலையும் குறிப்பிட்டு அமைச்சர் இது குறித்து அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் ட்விட்டர்பக்கத்தில் பதிவு மூலமாக வின்னபி விடுத்துள்ளனர்.

Leave a Comment