வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்!!
புதுச்சேரி மாநிலத்தில் 2022 – 23 நிதி ஆண்டிற்கான மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கபட்டது. அதன்படி தற்போது முதலில் பயன்படுத்தும் 100 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை ரூ.2.25 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூபாய் 2.90 லிருந்து ரூபாய் 3.25 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5 லிருந்து ரூ.5.40 பைசாவாகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூபாய் 6.45 லிருந்து ரூபாய் 6.80 பைசாவாகவும் உயர்த்தப்பட்டது.
இதேபோல் வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் முதல் 100 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.5.70க்கு பதிலாக 6 ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.6.75க்கு பதிலாக ரூ.7.05 பைசாவாகவும். 250 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு ரூ.7.50க்கு பதிலாக ரூ.7.80 என மின் கட்டணம் உயர்த்தப்படும் என ஏற்கனவே மின்துறை அறிவித்திருந்த நிலையில்.
இந்த புதிய மின்கட்டண உயர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது.