டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல்!!

Photo of author

By Savitha

டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல்.

ஆம் ஆத்மி அரசின் மின் மானியம் நீட்டிப்புக்கு டெல்லியின் துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா ஒப்புதல் அளிக்காததால், இன்றுடன் டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது என்று டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிஷி , இன்று முதல் டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய மின்சாரம் நிறுத்தப்படும். அதாவது நாளை முதல் மானிய கட்டணங்கள் வழங்கப்படாது.

வரும் ஆண்டிலும் மானியத்தை தொடர ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதால் இந்த மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. இது சம்மந்தமான கோப்பு துணைநிலை ஆளுநரிடம் உள்ளது, கோப்பு திரும்பி வராத வரை, ஆம் ஆத்மி அரசு மானிய விலையை வெளியிட முடியாது,, என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் , 200 யூனிட்-க்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்கள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது.

இதேபோல் 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்களுக்கு 50% வரம்பு என டெல்லி அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் , இந்த திட்டத்தை நீட்டிப்பது தொடர்பான கோப்பு டெல்லி துணைநிலை ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதால் இன்றுடன் மின் மானியம் நிறுத்தப்படுகிறதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.