இந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

Photo of author

By Sakthi

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த சமயத்தில் ஒருநாள் தொடரை இழந்த நம்முடைய இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தன்னுடைய சொந்த நாட்டில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. அந்தவகையில் இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். அந்த வெற்றி கொடுத்த உத்வேகத்தோடு இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோத இருக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆனது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய தொடங்கி இருக்கிறது. அந்த அணி நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 5 டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி ,ஆகிய ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. முதல் இரு டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் குஜராத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடர்களில் விளையாடுவதற்கு சென்னை வந்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இலங்கையின் சுற்றுப்பயணத்தை முடித்தபிறகு இங்கிலாந்து அணி இலங்கையை விழுத்திய சந்தோஷத்தில் இந்தியா வந்திருக்கிறது. இருபுறமும் பார்த்தோமானால் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்திவிட்டு இந்த போட்டிக்கு தயாராகி இருக்கிறது. அதே போல சமபலம் வாய்ந்த இலங்கை அணியை வீழ்த்திவிட்டு இந்திய அணியுடன் மோதுவதற்கு இங்கிலாந்து தன்னை தயார் படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆகவே இந்த தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.