281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!!

0
233
The England team set a target of 281 runs!! Australia still need 174 runs to win the first test!!
The England team set a target of 281 runs!! Australia still need 174 runs to win the first test!!

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!!

2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற இன்னும் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவில்  ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது.

பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி பத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட், ஹாரி ப்ரூக் தலா 46 ரன்களை எடுத்தனர்.பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்தார். ராபின்சன் 27 ரன்களும்,  பேரிஸ்டோ 20 ரன்களும் சேர்த்தனர்.இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியில் லயன், கமமின்ஸ் தலா 4 விக்கெட்டுகளையும், ஹசல்வுட், போலண்ட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 281 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. நான்காவது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது.இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 36 ரன்களும் மார்னஸ் லபச்சானே 13 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களும்  எடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியில் பிராட் 2 விக்கெட்டுகளையும், ராபின்சன் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணாயில் தொடக்க வீரர் உஸ்மான் க்வாஜா 34 ரன்களும் ஸ்காட் போலன்ட் 13 ரன்களும் எடுத்து கலத்தில் உள்ளனர்.

Previous articleடைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! 
Next articleவழக்கம் போல் அதிரடி காட்டிய சாய் சுதர்சன்!! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி!!