அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி! குழந்தைகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு!

0
170
The event at the government school! Awareness about POCSO for kids!
The event at the government school! Awareness about POCSO for kids!

அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி! குழந்தைகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு!

கோவை வடவள்ளி காவல்நிலை எல்லைக்குட்பட்ட, காவல்நிலைய ஆய்வாளர் லெனின் அப்பாதுரை உத்திரவின் பேரில் கோவை கலப்பனாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் வடவள்ளி காவல்நிலையை காவலர் பிரேமா கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு நடைபெற்று வருகின்றது. அதற்கு குழந்தைகள் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் எடுத்து கூறினார்.

இதில் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் பற்றி எடுத்து கூறி குழந்தைகளுக்கு எடுத்து தெரவித்தார். மேலும் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்திவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும்  1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போலீஸார் விசாரணை!
Next articleகுழந்தைகள் பெற்றால் மாதந்தோறும் 60000 ரூபாய் பணம்! அரசு வெளியிட்ட  புதிய திட்டம்