கேட்காமல் கொடுப்பவர் எம்ஜிஆர் என்பதற்கு இந்த செயல் சான்று

எம்ஜிஆர் அவர்களை மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், வாத்தியார் என பல பெயர்கள் அவருக்கு உண்டு. ஏனெனில் அவர் செய்த உதவிகள் அத்தனை. அதை எண்ணி கூட பார்க்க முடியாது. நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மக்கள் என அவர் செய்த உதவிகள் எண்ணில் அடங்காதவை.

 

ஒரு சில கட்சிக்காரர்களும் சரி, நடிகர்களும் அதை விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சொன்னாலும் ,அத்தனை உதவிகள் செய்திருக்கிறார் என்பது உண்மை.

 

அப்படி பொன்மன செம்மல் படப்பிடிப்பு இல்லாத நாள்களில் சற்று ஓய்வாக இருக்கும்போதும் ,கோட்டைக்கு செல்லும் போதும் அவருக்கு வந்த மலையளவு கடிதங்களை சற்று பார்ப்பார். அன்றொரு நாளில் அதில் நடுவே கையை விட்டு எடுக்கும்போது ஒரு கல்யாண பத்திரிகை தென்பட்டது

 

அதில் மணமக்கள் பெயர் மற்றும் மேல் பக்கம் தலைவரின் பெயர் மட்டும் அச்சிடப்பட்டிருந்தது .மற்றபடி தலைமை தாங்கவோ ,வருகை தந்து சிறப்பிக்குமாறோ ஒன்றுமில்லை .அதை அனுப்பியவர் யாரென்றும் தெரியவில்லை

 

உடனே தலைவர் அந்த பத்திரிகையை உளவுத்துறையிடம் கொடுத்து விசாரிக்க சொன்னார் .அவர்கள் சென்று விசாரிக்கையில் அது திண்டுக்கல் அருகில் ஒரு சிறிய ஊர் .மண மகளின் தந்தை பத்திரிக்கை அனுப்பியிருக்கிறார் .அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி .அந்த கூடாரத்தில் தலைவரின் படமொன்று ஒட்டியிருந்தது .அவ்வளவு தான்

 

இதை MGR அவர்களிடம் உளவுத்துறை தகவல் சமர்ப்பித்தது .

 

சரியாக கல்யாண நாளன்று யாரிடமும் சொல்லாமல் தலைவர் சிறிதளவே கழகத்தாருடன் அந்த கல்யாண வீட்டு வாசலுக்கு சென்றுவிட்டார். அரசு அதிகாரிகளும் போலீசாரும் அலறியடித்து திக்குமுக்காடி பாதுகாப்பு பந்தோபஸ்து அளித்தார்கள்

 

ஆனால் திரு MGR அவர்கள் அந்த மணமக்களை வாழ்த்தி பரிசளித்து விட்டு, அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை ஆரத்தழுவி நீ தான் என் உண்மை தொண்டன் .நீ தான்யா எனக்கு வேண்டும் என்று விடை பெற்று கிளம்பினார்.

 

முதலமைச்சர் ஆக இருந்த போதும் தொண்டன் ஒருத்தனுக்காக அனைத்து வேலைகளையும் விட்டு மணமக்களை வாழ்த்தி செல்ல பொன்மன செம்மல் வந்திருக்கிறார் என்றால் நிஜமாகவே அவர் மனம் பொன் போன்றது தான்.