எதிர்பார்த்த ஹீரோக்கள் திரைப்படம் வெளியாகவில்லை!! தீபாவளிக்கு  வெளியாகும் திரைப்படங்கள்!!

Photo of author

By Vijay

எதிர்பார்த்த ஹீரோக்கள் திரைப்படம் வெளியாகவில்லை!! தீபாவளிக்கு  வெளியாகும் திரைப்படங்கள்!!

Vijay

The expected heroes movie is not released

Cinema: பெரிய ஹீரோக்களின் திரைப்படம் வெளியாகவில்லை ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் ஒரு  திரைப்படத்தை தீபாவளி, பொங்கல் சுதந்திர தினம், ஆயுத பூஜை போன்ற முக்கிய விழாக்கள் குறிவைத்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் அரசு விடுமுறை மற்றும் அனைவருக்கும் விடுமுறை என்ற காரணத்தால் இது போன்ற விழாக்களை குறிவைத்து திரையிடப்படுகின்றன. அப்போது திரைப்படமானது நல்ல வசூலை பெற வழி வகுக்கிறது.

இது போன்ற விழாக்களில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல் விஜய் அஜித் போன்றவர்களின் திரைப்படங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை முன்னணி நடிகர்களின் திரைப்படம் ஏதும் வெளியாகவில்லை.இருந்தபோதிலும், இந்த ஆண்டு பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்.  சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ இந்த திரைப்படத்தினை எம் ராஜேஷ் இயக்கியுள்ளார்.

கவின் நடிக்கும் ‘ப்ளடி பெக்கர்’ இந்த திரைப்படம் நெல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார்.துல்கர் சல்மான் நடித்த  ‘லக்கி பாஸ்கர்’ இந்த திரைப்படத்தினை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து ஜிப்ரா பஹீரா சிங்கம் அகெய்ன் போன்ற பல திரைப்படங்கள் 31 ம் தேதி வெளியாக உள்ளன.