கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

0
153
The failed former chief minister! Emergency admission to Delhi AIIMS hospital!
The failed former chief minister! Emergency admission to Delhi AIIMS hospital!

கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலூ பிரசாத் யாதவ் மீது ஐந்து ஊழல் வழக்குகள் போடப்பட்டது.அந்த ஊழல் வழக்குகளால் 2017 ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். தற்பொழுதுதான் ஜாமனில் வெளிவந்தார். அவ்வாறு ஜாமினில் வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பொழுது திடீரென்று கீழே தவறி விழுந்தார். அவ்வாறு தவறி விழுந்ததில் அவர் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது தற்போது பீகார் முதல்வர் நிதீஷ் குமார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவரை அனுமதித்த சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.அதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹெலிகாப்டர் தரை இறங்கியதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் நேரடியாக சென்று நலம் விசாரித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லாலு பிரசாத்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்பொழுது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சிறுநீரகம் செயலிழந்ததாகவும்,உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் தற்போது இன்னல் பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி பிரதமர் மோடி லாலு பிரசாத் உடல் நலம் குறித்து அவரது மகன் தேஜஶ்ரீயிடம் கேட்டறிந்தார்.

Previous articleஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!
Next article பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்!