சூப்பர் ஸ்டாரையே மிஞ்சி 100 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகர்! வாயடைத்துப் போன சக நடிகர்கள்!!

Photo of author

By Parthipan K

உலக அளவில் பெரிதும் பேசப்பட்ட பாகுபலி படத்தின் கதாநாயகனான பிரபாஸ் தனது அடுத்த படத்திற்கு 100 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

இவரது அடுத்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜய்லாந்தி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது.

அதற்கென ஒரு பெரும் பட்ஜெட்டை ஏற்பாடு செய்திருந்த நிலையில் நடிகர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி இருந்த தயாரிப்பு நிறுவனம் பிரபாஸ் 100 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த  நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கிய, இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.இந்தப் படத்திற்கு பாலிவுட்நடிகை தீபிகா படுகோனே கதா நாயகியாக நடிக்கவிருக்கிறார்,

இந்தப் படத்திற்கு ‘பிரபாஸ் 21’  என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திலும் பிரபாஸ் இரட்டை வேடத்தில் உள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்திற்காக 70 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். ரஜினியை மிஞ்சி தற்போது 30 கோடி அதிகமாக பிரபாஸ் 100 கோடி சம்பளம் கேட்டிருப்பது மற்ற நடிகர்கள் இதனை ஒரு பெரும் போட்டியாக எடுத்துக் கொள்கின்றனர்.