சினிமாவிலிருந்து விலகுகிறார் பிரபல நடிகர்!! அரசியலுக்கு செல்வது என்பது சாதாரணமானது அல்ல – விஷால்!!

Photo of author

By Gayathri

சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணம் மேற்கொள்வது என்பது எளிதான விஷயம் அல்ல என்று தளபதி விஜயை குறித்து பேசியுள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் இதற்கான கட்சிக்கொடியினை 2024 ம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தளபதி விஜய் அறிமுகப்படுத்தினார். இவரின் முதல் கட்சி மாநாடு நாளை ( 27.10.2024 ) விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் விஷால் அவர்கள் பேசியுள்ளார். இதில், தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு நீங்கள் செல்வீர்களா ? என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு :-

நடிகர் விஷால், ” நடிகர் விஜய் அவர்களுக்கு முதலில் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொருத்தவரையில் கேப்டன் விஜயகாந்த் – க்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவர் விஜய் தான் என்று கூறியுள்ளார். மேலும் அரசியலுக்கு வந்த பின் அவருடைய திட்டங்கள் என்ன ? அவருடைய செயல்பாடுகள் என்ன ? என்பதனை அறிந்து கொள்ள தானும் ஆவலாக தான் இருக்கிறேன் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் கோடி கணக்கில் சம்பாதிக்கும் ஒருவர் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மக்களுக்காக வந்து பணிபுரிகிறேன் என்று கூறுவது மிகவும் சாதாரணமான விஷயம் அல்ல என்றும், நடிகர் விஜய் எடுத்துள்ள இந்த முடிவு மிகப் பெரிய முடிவு என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

மேலும் இவர் மாநாட்டிற்கு செல்வது குறித்து எந்தவித முடிவையும் தற்போது வரை எடுக்கவில்லை என்றும், ஆனால் மாநாட்டில் விஜய் அவர்கள் பேச இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.