பிரபல நடிகர் சோனு சூட் பல நடிகர்களுக்கு முன்னோடியாக கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்களுக்காக களத்தில் இறங்கி பல உதவிகளை செய்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், மகாராஷ்டிரா மாநிலத்தில் கிட்ராபூர் என்ற கிராமத்தை தத்தெடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 வீடுகளை கட்டி தருவதற்காக பூமி பூஜையை செய்தார்.
இந்த கொரோனா பாதிப்பினால், படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் ஒரு விவசாயியை போல் வயலில் வேலை செய்து சேரும் சகதியுமாக சல்மான் கான் இருக்கும் புகைப்படத்தை அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதன்பின் தற்போது ஏழை மக்களுக்காக சோனு சூட்டை போல் களத்தில் இறங்கி ஏழை மக்களுக்காக தற்போது வீடு கட்டும் முடிவை எடுத்துள்ளது, அந்த கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.