பிரபல நடிகைக்கும் அவரது சகோதரிக்கும் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர் – அந்த சகோதரிகள் யார் தெரியுமா?

Photo of author

By Parthipan K

டுவிட்டர் பக்கத்தில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல நடிகை ஒருவர் பதிவிட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.

இவ்வாறான பதிவுகளை பதிவிட்டு சர்ச்சையை ஏற்ப்படுத்திய பிரபல நடிகை கங்கனா ரணாவத் ஆவார். டுவிட்டரில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக, இவர் மீதும் இவரின் தங்கை ரங்கோலி சான்டல் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையத்தில் இவர்கள் இருவர் மீதும் அக்டோபர் மாதமே வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அப்போது இவர்கள் இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் இவர்கள் இருவரும் குறிப்பிட்ட தேதிகளில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை வருகின்ற 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த தேதிகளில் இவர்கள் இருவரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.