தன்னை மோசம் செய்து கொலை செய்ய முயன்ற தொழிலதிபர் என பிரபல நடிகை குற்றச்சாட்டு!

Photo of author

By Hasini

தன்னை மோசம் செய்து கொலை செய்ய முயன்ற தொழிலதிபர் என பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலியல் பலாத்காரம் என்பது சாதாரண பெண்களுக்கு மட்டும் அல்ல. எல்லாருக்கும் திரைத்துறையிலும் சர்வ சாதாரணம் போல் ஒரு குற்றச்சாட்டு இணையத்தின் மூலம் புகார் தரப்பட்டுள்ளது.

வங்காள தேசத்தின் பிரபல நடிகை ஷம்சுன்னஹர் ஸ்மிருதி. போரி மோனி என்பவர் பிரபலமாக அறியப்படும் நடிகை ஆவார். அவர் அங்குள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். அதுவும் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம்  பேஸ்புக் பதிவின் மூலம் கூறியுள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் அறிமுகமானார்.  மேலும் இவர் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வங்காள தேச திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த ஆண்டு ஆசியாவின் 100 டிஜிட்டல் நட்சத்திரங்களில் ஒருவராக இவரை தேர்ந்து எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்காவில் உள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சுமத்தி உள்ளார்.

பிரதமர் ஹசீனாவை அம்மா என்று அழைத்த நடிகை சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவியை நாடியதாகவும் ஆனால் நீதி கிடைக்கத் தவறியதாகவும் கூறியுள்ளார்.

மேலும்  இவர் நான் எங்கே நீதி தேடுவேன்,  நான் ஒரு பெண், மேலும் நான் ஒரு நடிகை,  ஆனால் அதற்கு முன் நான் ஒரு மனித இனம். என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் கூறி உள்ளார்.

உதவி ஐ.ஜி.பி சோஹல் ராணா,  நடிகை  போலீசை தொடர்பு கொள்ளும்போது போலீஸ்  நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை  பெயரைக் குறிப்பிடாமல் பேஸ்புக் பதிவில் குற்றச்சாட்டுகளை வைத்தார். அதன் பின்னர், நிருபர்களை சந்தித்த அவர் டாக்கா படகு கிளப்பின் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார  செயலாளர் நசீர் யு மஹ்மூத் தன்னை பாலியல் பலாத்காரமும், கொலையும் செய்ய முயன்றதாக  குற்றம் சாட்டியுள்ளார்.

டாக்கா படகு கிளப்பின் நிறுவன உறுப்பினரான நசீர் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.