ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை எட்டி உதைத்த பிரபல நடிகை!

Photo of author

By Vijay

ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை எட்டி உதைத்த பிரபல நடிகை!

நடிகர் வடிவேலு எப்படிப்பட்ட காமெடி நடிகர் என்பது பலருக்கும் தெரியும்.அவரை திரையில் பார்த்தாலே போதும் சிரிப்பு வந்துவிடும். அந்த அளவிற்கு தனது பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரி மூலம் மக்களை சிரிக்க வைத்து காமெடி கிங்காக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார்.ஆனால் இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதனை தொடர்ந்து மாமன்னன் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் மூலம் சமீபத்தில் தான் கம்பேக் கொடுத்தார்.அந்த சமயத்தில் திரையில் வடிவேலுவிற்கு ஏற்ற ஜோடி என்றால் அது நிச்சயம் கோவை சரளா தான் இவர்கள் இருவரின் காம்போ அவ்வளவு அருமையாக இருக்கும். விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பல படங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்கள் நடித்த அத்தனை படங்களிலும் கோவை சரளா வடிவேலுவை அடித்து துவைப்பது போன்ற காட்சிகள் தான் அதிகம் இருக்கும்.அதனை ரசிப்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் வடிவேலு உண்மையாகவே கோவை சரளாவிடம் உதை வங்கிய சம்பவம் நடந்துள்ளதாம்.

அதன்படி, ஒரு படத்தின் ஷூட்டிங்கில் வடிவேலு மற்றும் கோவை சரளா இடையே ஆக்‌ஷன் காட்சிகள் இருந்ததாம்.அப்போது கோவை சரளா வடிவேலுவை எட்டி உதைப்பது போல் நடிக்க வேண்டும். ஆனால் அந்த காட்சியின்போது நிஜமாகவே கோவை சரளாவின் கால் வடிவேலுவின் வயிற்றில் பட்டு விட்டதாம்.உடனே வடிவேலு என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்க. அதன் பின்னர் கோவை சரளா மிகவும் கவனமாக நடித்தாராம்.

இந்த தகவலை கோவை சரளாவே பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.சமீபகாலமாக வடிவேலு குறித்து அவருடன் பணியாற்றிய துணை காமெடி நடிகர் மற்றும் நடிகைகள் பல புகார்களை கூறி வருகிறார்கள்.அனைவரும் கூறும் முக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் வடிவேலு யாரையும் வளரவிட மாட்டார் என்பதுதான்.